Sale

270.00

வணங்கா மண்

இந்த நூல், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத் தமிழரின் கலாசார நிறுவனங்களின் ஒரு பகுதியாகவும், போராட்ட மேடையின் பதிவாகவும் அமைகிறது. உடலை வருத்திப் பணிய வைக்கும் துப்பாக்கி ரவைக்கு மாறாக, மனப் பரப்பில், ஆன்மீகத் தளத்தில் அசைக்க முடியாத – ஆதிக்கசக்தி வெல்ல முடியாத நிலையை உருவாக்குகிறது. மாபெரும் நியாய அரசியலைச் சார்ந்திருக்கிறது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான பெரும்படியான கருத்தியற் சமரின் பகுதியாக அமைந்திருக்கிறது. நம் சகபயணியின் தார்மீகக் குரலாய் ஒலிக்கிறது. இன்னும், அழிப்பு நிலையிலிருந்து (Destruction) கட்டுமான நிலைக்கு (Construction) வழிவகுக்கிறது. ‘ஈழப்போராட்டத்தை, அதன் சாதக பாதகங்களை, வெற்றிப் பயணம் தோல்வியில் முடிந்ததை – ஈழப் போராட்டத்தை முறையாக ஆராயக்கூடியவர்கள் நம்மத்தியில்’ இல்லை என்று தமிழ்ச் சூழலின் புலமை வறுமை பற்றிக் கவலைப்படும் அவரே அந்த வறுமையை நீக்கி வருகிறார்.

– முனைவர் செல்லத்துரை சுதர்சன்