விருதுகள்

பொதுநூலக இயக்கத்தின் தந்தை என்று சொல்லப்படுபவரும், தமிழ் நாட்டைச் சேர்ந்தவருமான சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன் என்னும் எஸ்.ஆர்.ரங்கநாதன் (1892-1972) ஆவார். திரு எஸ்.ஆர்.ரங்கநாதனின் ஐந்து விதிகளைப் பின்பற்றுகிற நூலகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணற்கேணி ஆய்விதழின் சார்பில் ‘எஸ்.ஆர்.ரங்கநாதன் விருதை’ கடந்த சில ஆண்டுகளாக அளித்து வருகிறோம்.

கல்வி நிறுவனங்களில் சாதிய, பாலின பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு மணற்கேணி சார்பில் ‘நிகரி’ விருதளித்துக் கௌரவித்து வருகிறோம்.