புரட்சியாளர் அம்பேத்கர் புதிய இந்தியாவுக்கான சிற்பி. சாதியற்ற, சுதந்திரம்- சமத்துவம் -சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்க முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் அவர். மனித குலத்தின் மேம்பாட்டுக்கும் விடுதலைக்கும் பாடுபட்ட உலகளாவிய தலைவர்கள் வரிசையிலேயே இன்று இந்த உலகம் புரட்சியாளர் அம்பேத்கரை வைத்துப் பார்க்கிறது. அவர் குறிப்பிட்ட சாதிக்காக மட்டும் போராடியவர் அல்ல; குறிப்பிட்ட இனம், மொழி என்ற அடையாளத்தை உயர்த்திப்பிடித்தவர் அல்ல; இந்திய சமூகத்தில் சாதியின் பெயரால் நிலவுகிற பாகுபாடுகளைக் களைய வேண்டும், சகோதரத்துவத்தின் மூலமாக சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கனவு கண்ட புரட்சியாளர்!
தொல். திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
****
அம்பேத்கர் பல்வேறு அரசியல் பிரச்சினை பற்றி அவர் கூறிய கருத்துகளின் சாராம்சத்தை வைத்து அறிவுப்பூர்வமான கட்டுரைகள் ஆங்கிலத்தில் மட்டுமே வந்துள்ளன. 21ஆம் நூற்றாண்டில்தான் அவருடைய தொகுக்கப்பட்ட கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் தமிழிலும் வரத்தொடங்கியுள்ளன.
அதேசமயத்தில் பல்வேறு இதழ்களில் அவரது தத்துவங்கள் குறித்து மற்ற அறிவுஜீவிகள் எழுதிய கட்டுரைகள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இன்றுவரை கிட்டவில்லை. அந்தக் குறையை தோழர் ரவிக்குமார் தீர்த்து வைத்துள்ளார். பல்வேறு இதழ்களில் வந்துள்ள ஆழமான கட்டுரைகளையெல்லாம் சிறப்பாக மொழிபெயர்த்து அவற்றைத் தொகுத்து ஒரே நூலாக ‘வாழும் அம்பேத்கர்’ என்ற பெயரில் ஒரு காத்திரமான பதிப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
……
தமிழில் இதுபோன்ற ஒரு நூல் இதுவரை வெளிவரவில்லையே என்ற ஏக்கத்தை இந்நூல் போக்குகிறது. அம்பேத்கரியத்தில் மூழ்க வேண்டுமென்று நினைக்கும் அனைத்து வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
– நீதிபதி கே.சந்துரு

Reviews
There are no reviews yet.