மணற்கேணி ஆய்வுவெளி | தமிழ் போதி | தலித்

மணற்கேணி பதிப்பகம்

UGC care list உள்ள மணற்கேணி ஆய்விதழுக்கு கட்டுரை அனுப்புவோர் கவனத்திற்கு…
~

மணற்கேணி ஆய்விதழுக்கு கட்டுரை அனுப்புவோர் கட்டுரைக்கான வரையறை (Format) மற்றும் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் போன்ற விவரங்களை மணற்கேணி இதழ் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிளை நூலகங்கள் மற்றும் மாவட்ட மைய நூலங்களில் மணற்கேணி ஆய்விதழ் கிடைக்கும்.

நீங்கள் அனுப்பும் கட்டுரையானது முழுக்க ஆய்வு நோக்கில் இருக்க வேண்டும். துணை நூல்கள் பட்டியல் சான்றெண் விளக்கங்கள் முழுவதுமாக இடம் பெற வேண்டும்.

பக்கங்கள் வரையறை கிடையாது.

யூனிகோட் ஃபாண்டில் (unicode font) அளவு 10 வைத்து கட்டுரை அனுப்ப வேண்டும்.

தமிழில் மட்டுமே கட்டுரை பிரசுரிக்கப்படும்.

இலக்கியம், இலக்கணம், தொல்லியல், அகழ்வாராய்ச்சி, வரலாறு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கட்டுரை இருக்கலாம்.

ஆய்வுக் கட்டுரைகள் துறைசார்ந்த அறிஞர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அவர்களது ஒப்புதலின் அடிப்படையிலேயே வெளியிடப்படும். எனவே கட்டுரை வெளிவருமா என்பதை ஓரிரு நாட்களில் தெரிவிக்க முடியாது.

இதழில் கட்டுரை வெளியிடப்படும் என்ற இறுதி முடிவை ஆசிரியரே எடுப்பார். மின்னஞ்சல் வழியாக மட்டுமே தகவல் தெரிவிக்கப்படும்.

கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி: manarkeni@gmail.com

தொடர்புக்கு