தமிழகத்தில் இடைக்காலத்தில் நிலவிய சோழர் ஆட்சியை யொட்டி சமஸ்கிருதம் தமிழ் இலக்கியத்தின் மீது செலுத்திய ஆதிக்கத்தை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், தமிழ்மொழியானது சமஸ்கிருதம் தெலுங்கு முதலான மொழிகள்மீது செலுத்திய ஆதிக்கத்தை ஆய்வுகள் வெளிப்படுத்தவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மன்னர் ஒருவர் சமஸ்கிருதம் கற்று அம்மொழியில் அற இலக்கியம் எழுதினார் என்றால் அந்தக் கருத்தியலுக்குள் திருக்குறளும் இன்ன பிற தமிழ் இலக்கியங்களும் தாக்கம் செலுத்தியிருக்க வேண்டும். தமிழ்மொழி ‘பெற்றதை’ மட்டுமே ஒரு சிலர் சுட்டிக்காட்டித் தமிழைக் ‘குட்டிக்’ கொண்டிருந்த சூழலில் தமிழ் ‘கொடுத்ததையும்’ இந்த நூல் ஆய்வுலகில் முன்வைக்கிறது.
– இரா. அறவேந்தன்
Reviews
There are no reviews yet.