ஓம்பிரகாஷ் வால்மீகியின் கவிதைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இருக்கிறது. அதன் வேதனை இருக்கிறது. அவர்களின் இந்த நிலைக்குக் காரணமானவர்களைப் பார்த்து கேட்கக் கேள்விகள் இருக்கின்றன. அவை மிக அற்புதமான கவிதைகளாகவும் ஆகி இருக்கின்றன. வலிந்து இடப்பட்ட சொற்கள் இல்லை. உரத்த தொனி இல்லை. போலியான எந்த உணர்வு வெளிப்பாடும் இல்லை. அப்படியே ஒரு நீர் ஒழுக்கு மேலிருந்து கீழ் நோக்கி விழுவது போலத் தெளிவாக இருக்கின்றன. அவை தரையில் விழும்போது உள்ளிருக்கும் பொருட்களைத் துல்லியமாகக் கண்ணுக்குப் புலப்படச் செய்வதாகவும் இருக்கின்றன. ஓம்பிரகாஷ் வால்மீகியின் இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் உலகத் தரத்திற்குச் சிறிதும் குறைவில்லாதவை.
– க்ருஷாங்கினி
Reviews
There are no reviews yet.