“காவிரி நீர் இனி தமிழருக்குக் கானல் நீர்” என அஞ்சும் வகையில் கர்நாடக மாநில அரசு, இந்திய அரசு, உச்சநீதி மன்றம் ஆகியவற்றின் போக்குகள் அமைந்துள்ளன. அண்மை யில் வெளியான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பால், தமிழர்களுக்கிருந்த கடைசி நம்பிக்கையும் இற்று வீழ்ந்தது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், கர்நாடகத்தில் உள்ள நிலத்தடிநீரைக் கருத்தில் கொள்ளாதது ஏன் ? பெங்களூரு மாநகர வாழ்மக்களின் குடிநீருக்கான தேவை குறித்துக் கவலைப்படுகிற உச்சநீதிமன்றம், பெருநகர் சென்னை வாழ் மக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாதது ஏன் ? ? பாதிப்பானது, தமிழர்களுக்குத்தான் என்கிற நிலையில் யாரும் மேல்முறையீடு செய்யமுடியாது என தீர்ப்பில் கூறியது ஏன் ?
உச்சநீதிமன்றத்தின் இத்தகைய ஓரவஞ்சனையான அணுகு முறைகளையும்; கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி குறித்த காலவரம்புக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தவிர்க்க முயலும் இந்திய அரசின் தமிழர் விரோத நிலைப்பாட்டையும்; நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த இடைக்காலஇறுதித் தீர்ப்புகளை ஒருபோதும் ஏற்காத – மதிக்காத கர்நாடக அரசின் அடாவடிப் போக்குகளையும் தோழர் ரவிக்குமார் இந்நூலின்வழி உரிய ஆதாரங்களோடு அம்பலப் படுத்துகிறார்.
ஆற்றுநீர் உரிமைக்கான இன்றைய நமது போர் அடுத்த தலைமுறைகளுக்கான பாதுகாப்புக்குரியது என்பதை அழுத்த மாக உணர்த்துகிறார். உரிய நேரத்தில் அரிய முயற்சி. தோழர் ரவிக்குமார் அவர்களின் இந்த மகத்தான பங்களிப்பு போற்று தலுக்குரியது.
தொல்.திருமாவளவன்
தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Reviews
There are no reviews yet.