‘தொழிலாளர் சட்டம்’ என்னுடைய ஏரியாவாக இருந்தாலும், நான் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட முதல் ஆண்டிலேயே மனித உரிமை வழக்குகளில் ஆஜரானேன். ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்கள் பலர் மிசா சட்டத்தில் கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அடிப்படை உரிமைகள்கூட மீறப்பட்டு, அனைவரும் அடித்துத் துன்புறுத்தப்பட்டதை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினேன். ஒரு வருட அனுபவம்கூட இல்லாத இளைஞன், அரசாங்கத்தை எதிர்த்து, சிறை அதிகாரிகளின் தவறுகளை தகுந்த ஆதாரங்களோடு நிரூபித்தபோது, பலரின் கவனம் என் மீது திரும்பியது. மிசா, தடா, பொடா என கருத்துரிமையின் கழுத்தை நெறிக்கும் சட்டங்களை எதிர்த்து பல வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகி இருக்கிறேன். 30 ஆண்டு கால வழக்கறிஞர் தொழிலில், பெரிய தலைவர்கள் முதல் சாதாரண பொதுஜனம் வரை, நான் வழக்காடிய எந்த மனித உரிமை வழக்கிலும் ஒருரூபாய் கூட கட்டணம் வாங்கியதில்லை.
View cart “கடல் கொள்ளும் தமிழ்நாடு” has been added to your cart.
Sale
Reviews
There are no reviews yet.