Sale

135.00

இமையம்: நிகழ்காலத்தின் கலைஞன்

தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களுள் ஒருவராக இமையம் திகழ்கிறார். அவருடைய எழுத்துகளில் காணப்படும் நேர்மையும், உண்மையும் நம்மை அவருடைய கதைக்குள் புதைத்து வைக்கும் தன்மைகொண்டவை. அவருடைய கதை மாந்தர்கள் எவரும் நமக்குப் புதியவர்கள் அல்லர். நாம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி சந்திப்பவர்கள்தான். ஆனால் அவர்களது மனங்களை நாம் அறிந்தவர்களில்லை. வலிகளை நாம் புரிந்துகொண்டவர்களில்லை.

எந்த ஒரு எழுத்து வாசகனை மேலே படிக்கவியலாமல் செய்கிறதோ, எந்த எழுத்து அவனை நிஜ வாழ்க்கையின் வலிகளோடும், பாடங்களோடும், கேள்விகளோடும் பிணைக்கிறதோ அந்த எழுத்தே சிறந்த இலக்கியம் என்று கருதுகிறேன். அதுவே காலம் கடந்து நிற்கும் என்றும் நம்புகிறேன். அந்தவகையில் இமையத்தின் படைப்புகளும் தமிழின் முக்கிய இலக்கியப் படைப்புகளாகத் திகழும்.

– ம.சு.சண்முகம் இ.ஆ.ப.,