Sale

180.00

எரியும் சொல்

சமூகம், அரசியல், கலை மற்றும் பண்பாடு எனப் பல தளங்களில் தன்னுடைய வலிமையான கருத்துகளைச் சாமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக வழங்கும் திறம் மிக்கவர் சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான நண்பர் திரு. ரவிக்குமார், புதிய தலைமுறை இணையப் பக்கங்களில் அவரின் பத்திகள் பதிவேற்றமானபோதே பரவலாக வாசகர்களைச் சென்றடைந்தன. இப்போது அவை அத்தனையும் ஒரே புத்தகமாக ஆவணப்படுத்தப்படுவதில் மகிழ்ச்சி.

தமிழகத்தின் நீண்டகாலப் பிரச்சனையாக இருக்கக்கூடிய காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடங்கி சமூகச் சிக்கலாக நீடிக்கும் ஆணவக்குற்றங்கள் வரை வரலாற்றுத் தரவுகளோடும், சட்டத்தின் நுணுக்கங்களோடும் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள் ஆழமானவை. வழக்காடு மொழியாகத் தமிழ், மாநிலங்களுக்கான நிதித்தற்சார்பு, விகிதாச்சாரத் தேர்தல்முறை எனப் பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் என்றும் பயன்படக்கூடிய தரவுகளைக் கொண்டிருக்கின்றன. தமிழ்ச்சமூகத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைத் தொகுப்பும் கவனத்திற்குரியது.

-ச.கார்த்திகைச்செல்வன்
தலைமை செய்தி ஆசிரியர்
புதிய தலைமுறை தொலைக்காட்சி