டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் பலரால் எழுதப்பட்டுள்ளது. மாநில மொழிகளில் எண்ணற்ற வாழ்க்கை வரலாறுகள் வெளிவந்துள்ளன. அவரது வாழ்நாளிலேயே அவரைப் பற்றிய மூன்று வாழ்க்கை வரலாறுகள் வெளிவந்தன. கராச்சியைச் சேர்ந்த தனாஜி பாலாஜி காரா வடேகர் எழுதிய முதல் மராத்தி வாழ்க்கை வரலாறு 29 மார்ச் 1946 அன்று வெளியானது. அதற்குப் பின்னர், சங்தேவ் கயர்மொடே எழுதிய பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட மராத்தி வாழ்க்கை வரலாற்றின் முதல் தொகுதி 1952ஆம் ஆண்டு வெளியானது. மூன்றாவது வாழ்க்கை வரலாறு, தனஞ்சய் கீர் எழுதிய ஆங்கில நூல், 1954ஆம் ஆண்டு வெளியானது. கயர்மொடேயின் பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட வாழ்க்கை வரலாறு மிக முக்கியமான இடத்தைப் பெற்றது. அவர் அம்பேத்கரின் அலுவலகத்திலேயே தங்கிப் படித்தவர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு அவரைப்பற்றி ஆய்வுசெய்த பலருக்கும் முதன்மையான தகவல் ஆதாரமாகத் திகழ்ந்தது கயர்மொடேயின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுதிகள்தாம். அதில் முதல் ஐந்து தொகுதிகளில் இருந்து சில பக்கங்கள் இங்கே மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளன.”
– ரவிக்குமார்

Reviews
There are no reviews yet.