நீதித்துறையில் பன்மைத்துவ செயல்முறையை விரைவு படுத்துவதற்கான ஒரு வழி, தகுதி அடிப்படையிலான, போட்டித்தன்மை மற்றும் வெளிப்படையான வழிமுறையின் மூலம் பல்வேறு பின்னணியில் இருந்து நீதிபதிகளைப் பணி அமர்த்தம் செய்யக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதாகும். திறமையான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் திறமைகளை கீழ் மட்டத்தில் இருந்து உயர் மட்டங்களுக்கு வளர்த்து ஊக்குவிக்கும் ‘அகில இந்திய நீதித்துறை சேவை’ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். நீதிபதியாகப் பணியாற்ற விரும்புவோர், நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பெரிய அளவில் திறன் கொண்ட இளைஞர்களின் ஒரு தொகுப்பை உருவாக்கலாம். இத்தகைய ஏற்பாட்டின்மூலம் குறைவாகப் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் சமூகக் குழுக்களுக்கும் வாய்ப்புகளை வழங்க முடியும். நீதி வழங்கல் முறையை வலுப்படுத்தும் இந்த நோக்கத்தை அடைவதற்கு நீங்கள் பொருத்தமானதாகக் கருதும் எந்தவொரு பயனுள்ள பொறிமுறையையும் உருவாக்குவதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
திருமதி திரௌபதி முர்மு
மாண்பமை குடியரசுத் தலைவர்
Reviews
There are no reviews yet.