Sale

160.00

ஸ்தனதாயினி

Meet The Author

மஹாஸ்வேதா தேவி தமது படைப்புகளில் வரலாற்றையும், அரசியலையும், சமூக நிலைமையையும் கசப்பு தோய்ந்த அங்கதத்தோடு சித்திரிக்கிறார். அப்படியான கதைகளை எழுதுவதற்குப் படைப்புத் திறன் மட்டும் போதாது, சமூகம் குறித்த பார்வையும், போராட்டங்களில் பார்வையாளராக இல்லாமல் பங்கேற்பாளராக இருந்து பெற்ற அனுபவமும், அநீதியைக் கண்டு குமுறும் அறச்சீற்றமும் வேண்டும். அத்தகைய பண்புகள்தாம் அவரது படைப்புகளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.

தலித் இலக்கியமும், பெண்ணிய இலக்கியமும் ஏராளமான ஒற்றுமைகளைக் கொண்டவை. ஒன்றிலிருந்து மற்றது கற்றுக்கொள்ள வேண்டியவை. ஒன்றையொன்று
ஆதரிக்கக் கடமைப்பட்டவை. இந்தியாவில் தலித் இலக்கியத்தில் சிறந்த படைப்பாளிகள் உண்டு, பெண்ணிய இலக்கியத்தில் மகத்தான ஆளுமைகள் உண்டு. ஆனால், அந்த இரண்டு இலக்கியப் போக்குகளுக்குமே வழிகாட்டியாகத் திகழக்கூடியவர் மஹாஸ்வேதா தேவி மட்டும்தான்.

ரவிக்குமார்