Sale

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

பிறவழித் தாக்குதல்

Meet The Author

2014 முதல் இந்திய ஒன்றியத்தில் ஆட்சி புரிந்து வரும் பாஜக தனது ஆட்சியை வலுப்படுத்தவும் நீட்டிக்கவும் வன்முறையை மட்டும் பயன்படுத்துவதில்லை; மாறாக ஜனநாயகத்தின் ஊன்றுகோல்களாக விளங்கி அதைப் பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, தேர்தல் ஆணையம், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், காவல் துறை, பாதுகாப்புப் படைகள், கலாச்சார நிறுவனங்கள் முதலிய அனைத்தையும் பயன்படுத்துகிறது; சிறுபான்மையினர், தலித்துகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை விளிம்பு நிலைக்குத் தள்ளுகிறது. இந்தியாவிற்கு அண்ணல் அம்பேத்கர் வழங்கிய அரசியல் சட்டத்தை, அவர் விரும்பிய குறிக்கோள்களுக்கு முற்றிலும் எதிரான வழியில் பயன்படுத்தி நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்துள்ளது – இவைதான் ‘பிற வழித் தாக்குதல்கள்’ இந்த அழிவு வேலைகளுக்கான சில நடவடிக்கைகள் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் நீண்டகாலம் ஆட்சிபுரிந்து வந்த காங்கிரஸாலும் பல்வேறு எதிர்க் கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டன – இந்த விஷயங்களை ஆழமான அறிவார்ந்த வகையில் விளக்கும் இந்த நூல், சமத்துவத்தைச் சீர்குலைப்பதற்கான வித்துகள் நம் நாட்டிலுள்ள பள்ளிக்கூடங்களிலேயே விதைக்கப்படுகின்றன என்பதைக் கூறுகிறது. ஜனநாயகத்தில் அக்கறை உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

-எஸ்.வி.ராஜதுரை

Reviews

There are no reviews yet.

Be the first to review “பிறவழித் தாக்குதல்”

Your email address will not be published. Required fields are marked *