120.00

கல்விக்கூடங்களில் சமத்துவம்

சமூகரீதியான அரவணைப்பு மற்றும் சாதியப் பாகுபாடுகளை ஒழித்தல் ஆகிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பள்ளி முதல் கல்லூரிகள் வரை மாணவர்களுக்குத் தனியே ஒரு சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்தச் சட்டம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் கடமைகளையும் பொறுப்புகளையும் நிர்ணயிக்க வேண்டும். மேற்பார்வையிடுதல், கட்டுப்படுத்துதல், இந்தச் சட்ட விதிகளை மீறினால் தண்டித்தல் ஆகிய அதிகாரங்கள் உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

– நீதிபதி கே.சந்துரு

வகுப்பறையில் பாகுபாடு களையப் படவேண்டுமென்றால் ஆசிரியர்கள் முதலில் மாணவர்களை நேசிப்பதற்கு முன்வரவேண்டும். மாணவர்களோடு நெருக்கமாக இருப்பதற்கு முன்வர வேண்டும். மாணவர்களைத் தண்டிக்கும் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

– பேராசிரியர் பா.கல்யாணி

சாதி, சமயப் பிரிவினைகள் அற்ற உன்னதமான சமத்துவச் சமூகத்திற்கு அவாவும் அனைவரிடமும் குறிப்பாக ஆசிரியர் பெருமக்கள் அனைவர் கையிலும் இருக்க வேண்டிய ஈரமும் விவேகமும் சுரக்கும் நூல் இது.

– பேராசிரியர் க.பஞ்சாங்கம்