Sale

63.00

அம்பேத்கரின் இராணுவம்

Meet The Author

அண்ணல் அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவை மகாராஷ்டிரா மாநிலத்தின் கொலாபா மாவட்டத்தில் இருக்கும் மஹத் என்னும் இடத்தில் அவர் நடத்திய போராட்டங்களாகும். 1927 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் அங்கு இரண்டு மாநாடுகள் ‘பகிஷ்கிருத் ஹித்தகாரனி சபா’ என்னும் அமைப்பால் நடத்தப்பட்டன. பொது குளத்தில் நீர் அருந்தும் போராட்டமும், மனு நீதியை எரிக்கும் போராட்டமும் அப்போதுதான் நடந்தன. அம்பேத்கர் மேற்கொண்ட அந்த நேரடி நடவடிக்கைகள் மகாராஷ்டிர மாநில தலித் மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களை அரசியல் சக்தியாக எழுச்சி பெற வைப்பதற்கும் அடிப்படைக் காரணிகளாக அமைந்தன. மஹத் போராட்டத்திற்கு முன்பு போராட்டக்காரர்களை சாதியவாதிகள் தாக்கி விடாமல் தடுப்பதற்காகத் தொண்டர் படை ஒன்று உருவாக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களால் உருவாக்கப்பட்ட அந்தப் படை அம்பேத்கருக்கு மிகுந்த நம்பிக்கை தருவதாக அமைந்தது. அதனால் ஊக்கம் பெற்றே ‘சமதா சைனிக் தள்’ என்னும் சமத்துவ இராணுவ அணியை அவர் உருவாக்கினார். அண்ணல் அம்பேத்கர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் எவ்வித இடையூறுமில்லாமல் நடப்பதற்கு இந்த சமத்துவ இராணுவ அணி மிகவும் உதவியாக இருந்தது.

சமத்துவ இராணுவ அணி எப்போது உருவாக்கப்பட்டது, எப்படி செயல்பட்டது என்ற வரலாற்றை டாக்டர் சஞ்சய் கஜ்பியே இந்த நூலில் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். இந்தியில் எழுதப்பட்ட அவரது நூலை க்ருஷாங்கினி அவர்கள் தேடிக் கண்டுபிடித்துத் தமிழாக்கம் செய்து தந்திருக்கிறார்.

ரவிக்குமார்

Reviews

There are no reviews yet.

Be the first to review “அம்பேத்கரின் இராணுவம்”

Your email address will not be published. Required fields are marked *