Sale

Original price was: ₹150.00.Current price is: ₹135.00.

வேங்கை வயல்

100 in stock

ஒரு குற்றம் மத அடிப்படையில் செய்யப்பட்டால் அதைப் பயங்கரவாதம் எனச் சொல்லி கடுமையான தண்டனை கொடுப்பதும், அதே குற்றம் சாதி அடிப்படையில் செய்யப்பட்டால் லேசாகக் கருதி கண்டுகொள்ளாமல் இருப்பதும் நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.

வேங்கை வயலில் நிகழ்ந்திருப்பது வன்கொடுமை அல்ல, அது ஒரு பயங்கரவாதக் குற்றம். எனவே அந்த குற்றத்தைச் செய்தவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) தண்டிக்க வேண்டும். சாதிப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த அதுதான் வழி.

 

______________

 

வேங்கை வயல் வன்கொடுமை தொடர்பாக தலித் இலக்கிய இதழ் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அதில் பல்வேறு இலக்கிய ஆளுமைகள் பங்களிப்புச் செய்தனர். குறிப்பாக ஈழக் கவிஞர்கள் சேரன், சுதர்சன் ஆகியோர் கவிதைகளை எழுதினார்கள். தமிழ்நாட்டு சாதிய வன்கொடுமைக்கு எதிராக ஈழத்துக் கவிஞர்கள் குரலெழுப்பியிருப்பது இதுவே முதல்முறையாகும். இது சாதிய பயங்கரவாதத்துக்கு எதிரான சனநாயகக் குரல்களின் தொகுப்பாகும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வேங்கை வயல்”

Your email address will not be published. Required fields are marked *