Sale

225.00

உணர்வுத் தோழமை

இன்னின்ன பிரச்சனைகளில்தான் எனக்கு ஆர்வம், மற்றதில் நான் ஆர்வம் காட்டமாட்டேன் என்று இல்லாமல் எந்த விஷயமாக இருந்தாலும் – ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் வருகிறது என்றால் அந்த மசோதாவைப் படிப்பதற்கு உங்களுக்கு நேரம் இல்லை என்றால், ரவிக்குமார் எங்கே இருக்கிறார் என்று தேடிப் பிடித்து அவரைக் கேட்டால் நிச்சயமாக உங்களுக்கு ஒரு விளக்கம் தருவார். எல்லா விஷயங்களிலும் அவருக்கு இருக்கக்கூடிய இந்த ஆர்வம் – இது எனக்குத் தெரியாது, எனக்கு இதில் ஆர்வம் இல்லை என்று அவர் சொன்னது கிடையாது. எதுவாக இருந்தாலும் ஒரு ஆழ்ந்த அறிவோடு பல கோணங்களில் அதைப் பற்றி விவாதித்துச் சிந்தித்து ஒரு அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடியவர்.

கனிமொழி கருணாநிதி