கடினமான ஆங்கிலத்திலுள்ள தொழிலாளர் சட்டங்களை இன்றுவரை பல நீதிபதிகளே புரிந்து கொள்ளாத சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு அவற்றைப் புரிய வைப்பதற்கு உண்மைக் கதைகளுடன் சட்டத்தையும் சேர்த்து சொல்வது எளிதான புரியவைக்கும் முறையாகும். அதனால்தான் உண்மைக் கதைகளுடன் அதற்கு இணையான தீர்ப்புகளின் விவரங்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளேன்.
மேலும் புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றியுள்ளதாகவும், தங்களது அரசின் மாபெரும் சாதனை என்றும் ஒன்றிய அரசு முழுப்பக்க விளம்பரங்களில் கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் பழைய சட்டங்களிலுள்ள குறைகளை நிவர்த்திக்க புதிய சட்டத் தொகுப்புகள் எவ்விதத்திலும் உதவவில்லை என்றதோடு மாறாக பல பழைய உரிமைகளையெல்லாம் பறித்துவிட்டன என்பதை தக்க எடுத்துக் காட்டுகளுடன் இந்நூலில் விளக்கியுள்ளேன்.
– நீதிபதி கே.சந்துரு

Reviews
There are no reviews yet.