இந்தியப் பாசிசத்தைப் புரிந்துகொள்ள வகுப்புவாதத்தை மட்டுமே ஆராய்ந்தால் போதாது. கும்பலாட்சி (Mobocracy) ஜனரஞ்சக வாதம் (Populism) முதலானவற்றுக்கும் பாசிசத்துக்கும் இடையிலான உறவையும் பார்க்க வேண்டும். தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் பாசிசம் எவ்வாறு ஊடுருவி அவற்றைத் தன்வயப்படுத்தியுள்ளது என்பதையும் நாம் நுணுகிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் பாசிசத்தின் பிடிக்கு ஆட்படாத, கருத்தியல்சார் அரசு சாதனமாக மாறாத ஓர் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை உணரமுடியும். இந்த உரையைப் படிப்பவர்களில் ஒரு சிலராவது அதை நோக்கி உந்தப்படுவார்களென நம்புகிறேன்.
ரவிக்குமார்
Reviews
There are no reviews yet.