உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளின் நியமனம், ஆரம்பத்தில் தலைமை நீதிபதியின் செல்வாக்கு இருப்பினும், பின்னர் மூன்று உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் கொலிஜியம் நியமன நடைமுறைக்கு வந்தது. தலைமை நீதிபதி தவிர, முதல் மூத்த நீதிபதிகள் இருவர் அடங்கிய கொலிஜியம் நடைமுறைக்கு வந்த பிறகும் நீதிபதிகள் நியமனத்தில் பன்னோக்குத் தன்மை இல்லாமலே இருந்தது.
……
இந்த சூழ்நிலையில்தான் மணற்கேணி ‘சாதியைப் பாதுகாக்கும் நீதித்துறை’ என்ற தலைப்பில் இரண்டு நீண்ட கட்டுரைகளைப் புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டுரையில் நீதிபதிகளின் சாதிப் பற்றுகள் ஏதோ தற்பொழுது எழுந்ததல்ல. அதனுடைய வயது நூறாண்டுகளுக்கு மேல் என்பதைத் தெளிவுபடுத்தும். இரண்டாவது கட்டுரை முனைவர் மோகன் கோபால் எழுதிய கட்டுரையில் எப்படி உயர்சாதியைச் சேர்ந்த நீதிபதிகளின் மனப்போக்கு இடஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கான ஆயுதத்தைத் தங்களது வியாக்கியானங்கள் மூலம் துருப்பிடித்த ஆயுதமாக மாற்றியுள்ளது என்பதைப் பல தீர்ப்புகள் மூலம் விளக்கியுள்ளார். நீதிபதி
கே.சந்துரு

Reviews
There are no reviews yet.