“சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது அவரைத் தேர்தல் களத்தில் இறக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அஇஅதிமுக கூட்டணியில் இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் பக்கம் நகர்ந்துவிட்டது. அதற்குக் காரணம் ரவிக்குமார்தான் என்றொரு பேச்சு கிளம்பும் அளவுக்கு அப்போதைய முதல்வர் அவர்களோடு நெருக்கமாக இருந்தார். ஜூனியர் விகடனில் அவரது தொடர்கட்டுரைகள் வந்தபோது ஒவ்வொன்றின் மீது முதலமைச்சர் கலைஞரின் கவனம் விழுந்தது. அதற்கேற்பச் சட்டமன்ற விவாதங்கள் நடந்தன; தீர்மானங்கள் போடப்பட்டன. மூன்றாம் பாலினத்தவர் நலவாரியம், புதிரைவண்ணார் நலவாரியம், வீட்டு வேலை செய்பவர்களுக்கான உரிமைகள், ஈழ அகதிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் உயர்வு என அந்த நேரத்தில் பலவற்றில் அரசின் கவனத்தை ஈர்த்தார்; செயல்பட வைத்தார். தனது நேரம் அனைத்தையும் பொதுவேலைகளுக்கே வழங்கிடும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை விழுப்புரம் தொகுதி பெற்றிருக்கிறது. மக்களோடு உறவுகொள்ள அலைபேசியில் தனிச்செயலியை உருவாக்கித்தந்த முன்மாதிரி அவர். அதன் வெளியீட்டுவிழாவில் கூட ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வனோடு நானும் கலந்துகொண்டேன். அவர்மீது தொகுதிவாழ் மக்களும் தமிழ் அமைப்புகளும் வைத்திருக்கும் நம்பிக்கையையும் அவரது மணிவிழா நிகழ்வொன்றில் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அ.ராமசாமி
Reviews
There are no reviews yet.