உலகை விளக்குவதல்ல; மாற்றுவதே தற்போதைய பிரச்சினை என்பது காரல் மார்க்ஸின் புகழ்பெற்ற கருத்தாக்கம். சொற்கள் விளக்குகின்றன. சிந்தனையாளர்கள் இவற்றைக்கொண்டு உரையாடல்களைக் கட்டமைக்கிறார்கள். இது கருத்துலகம் எனும் அகக்கட்டுமானம் ஆகின்றது. பிறிதொரு நிலையில் புறஉலகின் மாற்றங்களைக் களப்பணியே சாத்தியப்படுத்துகிறது. ஆகவே அறிவுஜீவிகள் சொல்வதையே செயலாகக் கொண்டுள்ளனர் என்றும் களப்போராளிகள் செயலையே சிறந்த சொல்லாகக் கருதுகின்றனர் என்றும் உணர்ந்துகொள்ளலாம். இவ்விரண்டையும் எதிர்வுகளாக்கித் தர்க்கம் செய்வோர் பலருண்டு. இவற்றின் இயைபுணர்ந்து இயங்குவோர் வெகுசிலரே. இவர்களால் எதுவொன்றிலும் தன்னைச் சுருக்கிக் கொள்ள இயலாது. மட்டுமின்றி எதிர்ப்படும் சாத்தியங்கள் அனைத்தையும் கைகொள்பவர்களாகவும் இருப்பார்கள். சமூகத்தை மேன்மையுறச் செய்வதில் இவர்களின் பங்கே அளப்பரியதாக அமைகின்றது. முனைவர் து. ரவிக்குமார் அவர்கள் இவ்வாறு சொல்லும் செயலும் ஒத்திசைந்து இயங்கும் ஆளுமைகளுள் ஒருவர்.
இளம்ஆய்வாளர்களாகிய நாங்கள் ரவிக்குமார் அவர்கள் வழியாகவும் மணற்கேணி வழியாகவும் கற்றுக்கொண்டவையும் பெற்றுக்கொண்டவையும் அதிகம். அவரது பெரும்பணிக்கு நாங்கள் அளிக்கின்ற சிறியதொரு பரிசாகவே இத்தொகுப்பைக் கருதுகின்றோம்.
ரவிக்குமார் அவர்களைப் பற்றி 11 கட்டுரைகள் மற்றும் மொழி, இலக்கியம், தொல்லியல், பண்பாட்டியல் என்ற வகைமைகளின்கீழ் 39 ஆளுமைகள் எழுதியிருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் என தமிழுக்கு வளம் சேர்ப்பதாக இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது.
Reviews
There are no reviews yet.