தமிழகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் சமூக நிகழ்வுகளையும் அரசியல் போக்குகளையும் அக்கறையோடு கவனிப்பவர்களாகவும் அவைகுறித்து உரையாடுபவர்களாகவும் பெரும்பாலும் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள்தாம் இருக்கிறார்கள். அவர்கள்தாம் இளம் தலைமுறையைச் சார்ந்த மாணவர்கள் நடுவில் சமூகப் பிரக்ஞையை விதைப்பவர்களாக விளங்குகிறார்கள். அத்தகைய பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது என்றாலும் இன்றைக்கும் அவர்கள் மூலமாகத்தான் இளைஞர்களிடையே ஓரளவாவது சமூகம் குறித்த பார்வையும் விமர்சனமும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒருவர்தான் பேராசிரியர் க. பஞ்சாங்கம். அவர் ஏறத்தாழ முப்பத்தெட்டு ஆண்டுகள் தமது பேராசிரியர் பணியின் மூலமாக மாணவர்களிடையே வாழ்ந்திருக்கிறார். வகுப்பில் நான்கு சுவர்களுக்கு இடையில் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை நடத்துவதற்கு மட்டுமே, தான் விதிக்கப்பட்டவன் அல்லன் என்பதைத் தொடக்கக் காலத்திலேயே உணர்ந்து செயல்பட்டுள்ளார். அதற்கு மார்க்சியம் துணை புரிந்திருக்கிறது. சமூகத்திற்கும் அறிவுத் துறைகளுக்கும் இடையிலுள்ள நெருங்கிய பிணைப்பை, உறவை மாணவர்களுக்குச் சுட்டிக்காட்டி அதன் வழியாகச் சமூகம் குறித்த கருத்தாடலை வளர்த்தெடுத்தவர் பஞ்சாங்கம்.
பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் எழுத்துலகத்தை அறிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் இந்த நூல் உதவியாக இருக்கும்.
ரவிக்குமார்
Reviews
There are no reviews yet.