பள்ளிப்பருவத்து வாழ்க்கை என்றதும் ஏற்படுகிற ஒரு வகையான கற்பனைக்கும் இந்த நூலின் அடர்த்திக்குமான இடைவெளியை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியுமா என்று தெரியவில்லை.
ஒவ்வொரு கட்டுரையும் நம்மை தீவிரமான சிந்தனைக்குள் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது. ஒரு கட்டுரையைப் படித்து முடித்தபின் சற்றேன் தளர்வாக தலையைப் பின்பக்கமாக சாய்த்து, கண்களை மூடி கைகளைத் தலைக்குமேல் வைத்து யோசிக்க வைக்கிறது. வாழ்க்கையை ஒரு நீள் வட்டத்தில் சுற்றிக் காட்டுகிறது. என்னென்னவோ நினைவுகள் ஏதேதோ கவலைகள் வந்து போகின்றன.
ஒவ்வொரு கட்டுரையும் காலத்தைப் பிரதி எடுத்துக் காட்டுகிறது. இமையம் எண்பதுகளில் படிக்க வருகிறார். அ.ராமசாமியும் பஞ்சாங்கமும் ஒரே காலகட்டத்தில் படித்தவர்களாக இருக்கலாம். பேரா.கல்யாணியும் ஞானக்கூத்தனும் வேறொரு காலக்கட்டத்தின் நீள அகலத்தை அளந்து காட்டுகிறார்கள். இந்திரபார்த்தசாரதியின் காலமோ முற்றிலும் வேறாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு எழுபது எண்பது வருட கால நினைவுகளைத் தாங்கி நிற்கிறது ‘பள்ளிபருவம்’
க.துளசிதாசன்
முதல்வர், எஸ்.ஆர்.வி.பள்ளி, சமயபுரம், திருச்சி
Reviews
There are no reviews yet.