நான் நீதிபதியாக நியமனம் பெற்ற தகவல்களையும், அதுகுறித்து எழுந்த சச்சரவுகளையும் பதிவு செய்ய முற்பட்டதுதான் இப்புத்தகத்தின் விளைவு. என்னுடைய பதிவில் எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்கள், அதற்கான ஆதாரமான செய்திக் குறிப்புகள், கொலிஜிய நியமனத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாடல் இவற்றையெல்லாம் இங்குப் பதிவு செய்திருக்கிறேன். இந்நூலைப் படிப்பவர்கள் மனதில் கொலிஜிய நியமன நடைமுறை எவ்விதத்திலும் நீதித்துறை சுதந்திரத்தைக் காக்கவில்லை என்றும், நியமனங்களில் அரசியல் குறுக்கீடுகள் சர்வ சாதாரணம் என்றும் உணர முற்பட்டால் அது நீதிபதிகள் நியமனத்தில் புதிய நடைமுறை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை வலுவாக்கும்.
நீதிபதி கே.சந்துரு

Reviews
There are no reviews yet.