தமிழில் தலித் இலக்கிய எழுச்சியைத் தொடர்ந்து ஆழிப் பேரலையாய் எழுந்துவந்து பெண்ணியம். ஏராளமான பெண் எழுத்தாளர்கள் தமது படைப்புகளை முன்வைத்தனர். அவர்களின் எழுத்துகளைத் தமிழ் பதிப்புலகம் பண்டமாக மாற்ற முயற்சித்தது என்ற குற்றச்சாட்டு இருந்தபோதிலும் அவற்றுக்குக் கிடைத்த வெளியும் அங்கீகாரமும் வரவேற்கத்தக்கவையே. தமக்குக் கிடைத்த வெளியைத் தக்க வைத்துக்கொள்வது எப்படித் தலித் படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததோ அப்படித்தான் பெண்களுக்கும் இருந்தது. அந்தச் சவாலை எதிர்கொண்டு தொடர்ச்சியாகத் தமது எழுத்துகளை முன்வைத்துவரும் பெண் எழுத்தாளர்கள் ஒரு சிலர்தான். அவர்களின் ஒருவர் தேன்மொழி. அவரது மொழிபெயர்ப்பில் வெளிவரும் இந்தத் தொகுப்பு பெண்களைப் பற்றிய ஆண்களின் கற்பிதங்களை உடைப்பதோடு பாகிஸ்தானைப் பற்றிய கட்டுக்கதைகளையும் கலைத்துப்போடுகிறது.
– ரவிக்குமார்
Reviews
There are no reviews yet.