எட்வர்ட் வேடி ஸெய்த்
Edward Wadie Said
(01.11.1935 -24.09.2003)
எட்வர்ட் ஸெய்த் புகழ்பெற்ற சிந்தனை யாளர் மட்டுமல்ல, பாலஸ்தீனிய போராளியு மாவார். ஜெரூசலத்தில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த ஸெய்த்தின் இளமைக்காலம் கெய்ரோவிலும் எகிப்திலும் கழிந்தது. பி.ஏ. பட்டத்தை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத் திலும், எம்.ஏ. மற்றும் பி.எச்.டி. பட்டங்களை ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலும் பெற்ற ஸெய்த் ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியராக கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிவந்தார். அவருக்கு ஆங்கிலம், அரபி மற்றும் ஃப்ரெஞ்ச் மொழி களில் நல்ல புலமை இருந்தது.
ஆசிய மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகள் குறித்து மேற்குலகில் நீண்டகாலமாகவே நிலவிவரும் தவறான திரிக்கப்பட்ட மனோபாவமே ஐரோப்பிய, அமெரிக்கக் காலனிய ஆக்கிரமிப்புகளின் அடிப்படையாக இருக் கிறது என்பதைத் தனது “ஓரியண்டலிசம்” (1978 நூலின்மூலம் ஸெய்த் எடுத்துக் காட்டினார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அதைப் போலச் சர்ச்கை களையும் விவாதங்களையும் ஏற்படுத்திய நூல் வேறு எதுவுமில்லையென்று கூறலாம்.
பாலஸ்தீனிய மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் போராடிவந்த ஸெய்த் பாலஸ்தீனிய தேசிய கவுன்சிலில் (PNC) பல ஆண்டுகாலம் அங்கம் வகித்தார். 1993இல் கையெழுத்திடப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தை எதிர்த்து யாஸர் அராஃபத்துடன் தனக்கிருந்த உறவை முறித்துக் கொண்ட ஸெய்த் பாலஸ்தீனிய தேசிய கவுன்சில் லிருந்தும் விலகினார்.
சிந்தனையாளர், போராளி என்பது மட்டுமல்ல ஸெய்த் மிகச்சிறந்த பத்திரிகையாளரும்கூட Nationd, Guardian, Le Monde Diplomatigne, Counterpunch. Al-Hayar, Al-Ahram முதலிய பத்திரிகைகளில் அவர் எழுதிவந்த கட்டுரைகள் மிகவும் முக்கியமானவையாகும்.
ஸெய்த்தின் இசை ஆர்வம் குறிப்பிட்டுச் சொல்லப் பட வேண்டியதாகும். இசையமைப்பாளர் டேனியல் பேரன்போம் என்பவரோடு சேர்ந்து 1990இல் “வெஸ்ட்-ஈஸ்ட் திவான் ஆர்க்கெஸ்ட்ரா” வை நிறுவிய ஸெய்த் அரபு நாடுகளிலிருந்தும் இஸ்ரேலிலிருந்தும் திறமைவாய்ந்த இளம் இசைக்கலைஞர்களை ஆண்டு தோறும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தச் செய்தார். அதன்மூலம் அந்த நாடுகளின் மக்களுக்கிடையே நல்லுறவை வளர்க்க முயற்சித்தார்.
பதினோரு ஆண்டுகளாக இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எட்வர்ட் ஸெய்த் தனது அறுபத்தேழாவது வயதில் காலமானார்.
Reviews
There are no reviews yet.