Sale

Original price was: ₹60.00.Current price is: ₹54.00.

அபராதிகளின் காலம்

172 in stock

Meet The Author

2014 திசம்பர் 31 வரையில் இந்தியாவில் குடியேறியுள்ள அண்டைநாடுகளைச் சார்ந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது எனச் சட்டத்திருத்தம் செய்துள்ள மோடி அரசு, வெளிப்படையாக முஸ்லிம்களையும் ஈழத்தமிழர்களையும் புறக்கணித்திருப்பதுதான் தற்போது வெடித்துள்ள மாணவர் போராட்டம் உள்ளிட்ட மக்கள் போராட்டங்களுக்குக் காரணமாகும். அப்போராட்டங்களை ஒடுக்குவதற்கென துப்பாக்கிச்சூடு, உயிர்ப்பலி என அரசப் பயங்கரவாதம், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், புதுதில்லி மற்றும் கர்நாடகா என நாடெங்கிலும் வேகமாகப் பரவிவருகிறது.

இத்தகைய சூழலில் தோழர் ரவிக்குமார் அவர்களின் இந்நூல் மிகவும் பொருத்தமான – தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. இது பாஜக அரசின் மதவாத இனவாத அடிப்படையிலான ஃபாசிச பயங்கரவாதப் போக்கை அம்பலப்படுத்துகிறது. அத் துடன், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி) என்னும் நாடுதழுவிய அளவிலான விரிவாக்க செயல்திட்டம் குறித்தும் போதிய தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கொண்டு மிக விரிவாகவும் ஆழமாகவும் விவரிக்கிறது. குறிப்பாக, இச்சட்டம் இஸ்லாமியர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் மட்டுமே எதிரானது அல்ல; ஒட்டுமொத்த தேசத்துக்கே எதிரானது என்பதையும் ஆதாரங்களுடன் விளக்குகிறது.

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Reviews

There are no reviews yet.

Be the first to review “அபராதிகளின் காலம்”

Your email address will not be published. Required fields are marked *