‘அணுக்கி’ தொன்மங்களும் ஆய்வும் நயமாக இசைந்த ஓர் அருமையான சொல் ஓவியம்’. எளிய கிராம மக்களின் கவிதை மிக்க இயல்பான உரையாடல்கள் வண்ணச் சித்திரங்களாக ஒளிர்கின்றன. இந்நாவலைக் தேன்மொழிக்கு இயல்பாகக் கைவந்த கவிதையாகவும் படிக்க முடியும்.
– இந்திரா பார்த்தசாரதி
ஆணையும் விஞ்சும் ஆளுமையோடு வேளாண்மையில் சாதிக்கும் மங்களம் ஆத்தா; தவறிழைத்த மகனுக்குத் தன் கையாலேயே மரணத்தை வழங்கும் முல்லை; தாய்மையின் மகத்துவத்தை உணர்த்தும் பாவை என மூன்று பெண்களை முதன்மை இழைகளாகக் கொண்டு நெய்யப்பட்டிருக்கும் படைப்பு இது.
‘இழிவின் அளவைக் கூட்டுவதே இலக்கிய மதிப்பு பெறுவதற்கான வழி’ எனத் தலித் இலக்கியத்துக்கு விதிக்கப்பட்ட வரையறையை உடைத்து தலித் மக்களின் பெருமிதம் மிக்க வரலாற்றைப் பண்பாட்டைப் பதிவு செய்யும் இந்நாவல் தமிழில் தலித் இலக்கியத்தின் இரண்டாவது அலையைத் தொடங்கி வைக்கிறது.
– ரவிக்குமார்
Reviews
There are no reviews yet.