இந்தியாவில் தீண்டாமையின் தோற்றம் குறித்த புரட்சியாளர் அம்பேத்கரின் ஆய்வு முடிவைத் தமிழ்நாட்டின் வரலாற்றுத் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து அவரது காலக் கணிப்புத் தமிழ்நாட்டுக்குப் பொருந்தவில்லை என்பதையும்; இந்து மதத்தை விட்டு வெளியேறுவேன் என்ற அவரது அறிவிப்புக்கு அவரது சமகாலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டுத் தலித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது பெரியாரும், அண்ணாவும் ஆதரவு தெரிவித்த வரலாற்றையும்; பௌத்த மதம் குறித்துத் தெரிந்துகொள்வதற்குச் சிறந்த நூலென அம்பேத்கரால் பரிந்துரைக்கப்பட்ட லட்சுமி நரசுவின் நூலை அயோத்திதாசர் ஏற்றுக்கொள்ளாததற்கான காரணங்களையும் எடுத்துக்கூறும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல், அம்பேத்கருக்கும் – லோகியாவுக்கும் இருந்த உறவையும்; அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த அம்பேத்கரின் தனித்துவமான பார்வைகளையும் விவரிக்கும் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை எரிப்பேன் என அம்பேத்கர் பேசியதன் உண்மையான பின்னணியையும் இந்நூல் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளையும் அவரது அரசியல் நிலைப்பாடுகளையும் நமது காலத்துக்கேற்ப எடுத்துப் பயன்படுத்தும்போது நாம் கடைப்பிடிக்கவேண்டிய ஆய்வுப் பார்வையை இந்த நூல் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது

Reviews
There are no reviews yet.