Sale

63.00

வானில் விட்டெறிந்த கனவு

ரவிக்குமார் தனது சமூக அக்கறைகளை அழுத்தமான அழகான தனித்துவமான குரலில் முன்வைக்கிறார். ‘வானில் விட்டெறிந்த கனவு’ என்ற இந்தக் கவிதை நூல் ‘சாட்சியங்களின் கவிதை’ என்பதற்கு முக்கியமான உதாரணமாக இருக்கிறது. தலித்துகள் மீதான வன்கொடுமைகளைப் பேசும் இக்கவிதைகள் அவற்றோடு தம்மை அடையாளப் படுத்தி அதனால் உருவாகும் வேதனையை எடுத்துரைக்கின்றன. நமது காலத்துக் கவிதை, ரோஜாக்களையும் பறவைகளையும் மட்டும் பாடிக் கொண்டிருக்க முடியாது, மாறாகத் தினமும் அவமானங்களுக்கிடையில் சுதந்திரமும் மகழ்ச்சியும் கொண்ட இன்னொரு உலகத்தைப் படைக்கப் போராடிக்கொண்டிருப்பவர்களுடைய பற்றியெரியும் இதயங்களின் அடி ஆழத்திலிருந்து வெளிப்பட வேண்டும் என்பதை ரவிக்குமார் கவிதைகள் உணர்த்துகின்றன.

– கவிஞர் கே.சச்சிதானந்தன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “வானில் விட்டெறிந்த கனவு”

Your email address will not be published. Required fields are marked *