Sale

Original price was: ₹280.00.Current price is: ₹250.00.

நமது கல்வி நமது மாணாக்கர்கள்

ஒரு நாட்டுக்கு அடிப்படையான மனித வளத்தை உருவாக்குவதில் கல்வியே பெரிதும் வினையாற்றுகிறது. எனவே, ஆட்சியாளர்கள் கல்வியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதனடிப்படையிலேயே கல்விக் கொள்கைகளின் உருவாக்கம், கல்வி நிறுவனங்களின் மேலாண்மை, கல்வி வளாகங்களின் ஒழுங்கமைப்பு முதலானவை தொழிற்படுகின்றன. அதிகாரத்தைச் செயல்படுத்த விழைபவர்கள் மட்டுமின்றி அதை எதிர்க்க முனைபவர்களுக்கும் கல்வி என்பது முக்கியமான களமாக இருக்கிறது. இந்த அதிகார முரண் நிலையைக் கல்விப் புலத்தில் பணியாற்றுபவர்கள் ஒப்பீட்டளவில் நுட்பமாக உணர முடியும். ஆனால், நமது கல்விமுறையும், கல்வி நிறுவனங்களில் நிலவும் சனநாயகமற்றச் சூழலும் கல்வியாளர்களையும் சேர்த்துச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து விடுபட்டுக் கல்வி குறித்து சுதந்திரமாகச் சிந்திக்கும் கல்வியாளர்கள் மிகவும் அரிதாகவே உருவாகின்றனர். அப்படி உருவானவர்களில் அ.ராமசாமி முக்கியமானவர். புதுச்சேரி, திருநெல்வேலி பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்த அனுபவம்; கலை, இலக்கியங்களில் இருக்கும் ஈடுபாடு, இவை யாவற்றுக்கும் மேலாகப் பட்டறிவாலும் பரந்த வாசிப்பாலும் செதுக்கிக்கொண்ட விமர்சன நோக்கு ஆகியவற்றை ஒருங்கே கொண்டவர் அ.ராமசாமி. துணைவேந்தராகும் வாய்ப்பைத் தகுதியிருந்தும் இழந்தவர். நிகழ்த்துக் கலை, திரைப்படம், இலக்கிய ஆக்கம் எனப் பன்முகத் திறன்கள் கொண்டவர். அயல்நாட்டுப் பயணங்கள், வார்சாவில் பணியாற்றிய அனுபவம் அவரை மேற்கு நாடுகளின் கல்விச் சூழலை இங்குள்ள சூழலுடன் ஒப்பிட்டு ஆராய உதவியிருக்கிறது. அவர் பல்வேறு தருணங்களில் கல்வி குறித்து எழுதிய கட்டுரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு கல்விப்புலம் சார்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, கல்வியைச் சனநாயகப்படுத்த விரும்பும் அனைவருக்கும் கையேடாகத் திகழும். – ரவிக்குமார்

Reviews

There are no reviews yet.

Be the first to review “நமது கல்வி நமது மாணாக்கர்கள்”

Your email address will not be published. Required fields are marked *