Author

Ravikumar - ரவிக்குமார்

""

முனைவர் து. ரவிக்குமார் M.A.B.L.,Ph.D மாணவப் பருவத்திலிருந்தே அம்பேத்கர் பெரியார் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு களப்பணி ஆற்றியவர். திராவிடர் கழகத்திலும் மார்க்சிய லெனினியச் சித்தாந்தத்திலும் ஈடுபாடு கொண்டு செயல்பட்டவர். 1980களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தலித் சிந்தனை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர். 1991 இல் கொண்டாடப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி அம்பேத்கரியச் சிந்தனைகளைப் பரப்பியவர். அம்பேத்கரின் மிக முக்கியமான கோரிக்கையான இரட்டை வாக்குரிமை தனி வாக்காளர் தொகுதி கோரிக்கையை மீண்டும் விவாதப் பொருளாக்கித் தமிழ்நாட்டில் 12 இடங்களில் மாநாடுகளை ஒருங்கிணைத்தவர். 2006 இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து தற்போது அதன் பொதுச் செயலாளராக இருக்கிறார். அரசியல் மட்டுமின்றி இலக்கியம், வரலாறு, கல்வெட்டியல், தொல்லியல் எனப் பரந்துபட்ட தளத்தில் செயல்படும் ரவிக்குமார், Indian Express, Pioneer, Seminar, Himal, தினமணி, இந்து தமிழ் திசை, தினமலர், இந்தியா டுடே. ஜூனியர் விகடன் உள்ளிட்ட இதழ்களில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பிபிசி தமிழோசை வானொலியில் 5 ஆண்டுகள் மாதாந்திர நிகழ்ச்சியை வழங்கியவர். தமிழ்ச் செவ்வியல், சமஸ்கிருதமும் தமிழும், தமிழ்த் தொல்லியல் ஆய்வுகள், தமிழ் பௌத்தம் முதலான பொருள்கள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளை முன்வைத்திருப்பவர். தற்போது தமிழில் இயங்கிவரும் இலக்கிய, அரசியல் திறனாய்வாளர்களுள் முக்கியமானவர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழிக்கு அருகில் மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் 29.05.1960 இல் பிறந்தவர். தற்போது 30, பாரத மாதா தெரு, மொரட்டாண்டி, ஆரோவில் அஞ்சல், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் என்ற முகவரியில் வசித்துவருகிறார். மின்னஞ்சல் : writerravikumar@gmail.com

Author's books

1 3 4