75 ஆண்டுகள் ஆன நமது அரசமைப்புச் சட்டம் அவ்வப்பொழுது செய்யப்பட்ட சட்டத்திருத்தங்களால் மேலும் செழிப்படைந்துள்ளது. ஆனால் ஒரு சில சட்டத்திருத்தங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சில சட்டத்திருத்தங்கள் நமக்குத் தெரிந்தே அரசியல் உள்நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
எது எப்படியிருப்பினும் நம்முடைய இறையாண்மை பெற்ற சோசலிச மதசார்பற்ற ஜனநாயகக் குடியரசைப் போற்றிப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்.
நாம் வெள்ளைக்காரர்களிடமிருந்து பெற்ற சுதந்திரப் பயிரைக் கண்ணீர் விட்டு வளர்த்துள்ளோம். அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதைப் பற்றி அண்ணல் அம்பேத்கர் கூறியதை நினைவு கூர்வோம்:
“சுதந்திரத்தை எவரும் அன்பளிப்பாகப் பெற இயலாது. போராடித்தான் அதனைப் பெற முடியும். தன்னிலை உயர்வு என்பது மற்றவர்களின் ஆசீர்வாதத்தால் வருவதன்று. அது ஒருவர் தம் சொந்தப் போராட்டத்தின் மூலமாகவும் செயல்களினாலும் மட்டுமே அடையக் கூடியது.”
– நீதிபதி கே.சந்துரு
Reviews
There are no reviews yet.