அம்பேத்கர் சொல்லியிருக்கின்ற கருத்துகள் தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின் கருத்துகளோடு ஒத்த கருத்துகள் என்பதையும் அந்தக் கருத்துகளின் அடிப்படையில்தான் நீதிபதி சந்துரு அவர்கள் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் என்பதையும் இந்த நூலைப் படித்தபோது நான் புரிந்துகொண்டேன்.”
கலைஞர் மு.கருணாநிதி
எல்லா நீதிபதிகளாலும் சமூகநீதியை நியாயப்படுத்தித் தீர்ப்பு எழுத முடியுமா? முடியாது! நீதியரசர் சந்துரு அவர்களால் முடிகிறது. அதற்குக் காரணத்தை அவரே பிரகடனப்படுத்துகிறார்: நான் ஒரு அம்பேத்கரிஸ்ட், நான் ஒரு இடதுசாரி சிந்தனையுள்ளவன், சமூக சனநாயகச் சிந்தனையுள்ளவன். இதுதான் இந்தப் புத்தகத்தின் அறைகூவல்.
தொல்.திருமாவளவன்
தலித் மக்கள்மீது ஏவப்படும் வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள், இதற்கெல்லாம் எப்படி சட்டங்களைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைக் காப்பது, சமூகநீதிப் பார்வையோடு எப்படித் தீர்ப்பு வழங்குவது என இந்தப் புத்தகத்தில் சந்துரு காட்டியிருக்கிறார்.
‘இந்து’ என்.ராம்
சித்தாந்தப் பார்வை இருந்தால் இப்போதிருக்கும் சட்டங்களை வைத்துக்கொண்டு எந்த அளவுக்கு அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டு போகலாம் என்பது மட்டுமின்றி இந்த சட்டங்களின் வரையறை என்ன என்பதையும் சந்துரு தனது தீர்ப்புகளின்மூலம் காட்டியிருக்கிறார்.
பத்திரிகையாளர் ஞாநி
Reviews
There are no reviews yet.