Sale

108.00

ரஜினிகாந்தும் புதுமைபித்தனும்

தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ரவிக்குமாரின் அறிவுத் தளச் செயல்பாடுகள் இரண்டு விதமானவை: ஒன்று புதிய சிந்தனைகளை, ஆளுமைகளை முறையாக அறிமுகம் செய்துவைத்தல். இரண்டு, அனைவரும் அறிந்த விஷயங்கள் குறித்துப் புதிய வெளிச்சம் பாய்ச்சுதல். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவுத் தளத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் ரவிக்குமாரின் எழுத்துக்களில் இந்த இரட்டை அம் சத்தைத் தவறாமல் பார்க்க முடியும். ரஜினிகாந்த்தும் புதுமைப் பித்தனும் என்னும் இந்த நூல் அதற்கான சிறந்த உதாரணம்.

இலக்கியம், திரைப்படம், பயங்கரவாதம், பெண்களின் வாழ்நிலை, தொல் லியல், தகவல் பெருக்கம், சாதிப் பெரும்பான்மைவாதம், ஈழப் பிரச்சனை எனப் பல விஷயங்களைப் பற்றியும் ரவிக்குமார் தெளிவாகவும் தீர்க்க மாகவும் தன் சிந்தனைகளை முன்வைக்கிறார். எதையும் அலாதியான கோணத்தில் பார்ப்பதும், விரிவான பின்புலத்தில் வைத்து அதை அலசுவதும் ரவிக்குமாரின் அணுகுமுறை. அறிவியல், உளவியல் முதலான துறைகள் சார்ந்த பார்வைகளுடன் நுணுகி ஆராய்ந்து புதிய உண்மைகளை வெளிப் படுத்துவது அவருடைய தனித்தன்மை. தலைப்புக் கட்டுரையும் குஷ்புவின் ‘கவர்ச்சி’ குறித்த அலசலும் இத்தகைய நுட்பமான அணுகுமுறைக்கான சிறந்த உதாரணங்கள். அமெரிக்கா பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையும், பயங்கரவாதத்தின் கருத்தியலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம் என்பதை ஒசாமா கொலையை முன்வைத்து நிறுவும் விதமும் இத்தகையதுதான். மாவோயிஸ்டுகளின் வன்முறை, ஊடகங்கள், தொழில்நுட்பத்தின் ஆபத்து, கனவுகள் என எதை எடுத்துக்கொண்டாலும் இத்தகைய பயணம் நிகழ்கிறது.

ரவிக்குமாருக்குக் கட்டுரைக்கான பொருள் என்பது வெறும் தொடக்கப் புள்ளி மட்டுமே. அதை முன்னிட்டு அரசியல், தத்துவம் வாழ்வியல் எனப் பல்வேறு அம்சங்களையும் தழுவி விரிவது அவருடைய அறிவுசார் பயணத்தின் இயல்பு. இந்தப் பயணம் நம்மையும் அத்தகைய பயணத்தை மேற்கொள்ள உதவுகிறது. இந்தக் கட்டுரைகளைக் கவனமாகப் படிக்கும் யாரும் தன்னைச் சுற்றி நடப்பவற்றை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுக் கடந்துவிட முடியாது. இந்த நூலின் ஆகப் பெரிய பலன் இதுதான்.

அரவிந்தன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரஜினிகாந்தும் புதுமைபித்தனும்”

Your email address will not be published. Required fields are marked *