ஹமாஸ் மற்றும். இஸ்லாமிய ஜிஹாத்’ அமைப்பினரை ஒடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் கோருவதன் பின்னே அதன் ராணுவநோக்கம் ஒளிந்திருப்பதாக ஸெய்த் குறிப்பிட்டார். அப்படி ஒடுக்குவதன்மூலம் பாலஸ்தீன அரசுக்கு எதிரான உள்நாட்டு யுத்தமொன்றைத் தூண்டிவிட இஸ்ரேல் முயற்சிப்பதாக ஸெய்த் சொன்னார். தாங்கள் ‘தோற்கடிக்கப்பட்டவர்கள்’ என்பதை ஏற்க மறுத்த பாலஸ்தீனிய மக்களின் உறுதியான எதிர்ப்பை அவரது வாழ்க்கையின் கடைசி மாதங்களில் ஸெய்த் மகிழ்ச்சியோடு ‘பாராட்டினார். முஸ்தபா பர்குதியால் வழிநடத்தப்படும் நேஷனல் பொலிட்டிக்கல் இனிஷியேடிவ்’ மேலும் உயிப்புமிக்க படைப்புக்குணம் கொண்ட பாலஸ்தீனிய அரசியலை முன்வைக்கும். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என ஸெய்த் நம்பிக்கை தெரிவித்தார். ‘நாற்பது சதவீத நிலத்தை மட்டுமே கொண்ட தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அரசு. அகதிகளால் கைவிடப்பட்ட, இஸ்ரேலின் பிடியில் ஜெரூசலம் இருக்கிற அரசு – அதுவல்ல நமது கோரிக்கை. இறையாண்மை மிக்க, யூதர்களும், அராபியர்களும் சேர்ந்து ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்த பிரதேசங்களைக் கொண்ட. ஒரு தேசமே நமது கோரிக்கை….’ என்றார்.
பாலஸ்தீனம், ஈராக் ஆகிய இரு நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பு மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி இல்லாமல் செய்துவிட்டது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவரது குரல் பதிலீடு செய்ய முடியாதது. ஆனால் அவரது பாரம்பர்யம் என்றும் நிலைத்து ‘நீடித்திருக்கக்கூடியது. அவர், அவருக்கும் அப்பால் பல வாழ்வுகளைக் கொண்டவர்.
– தாரிக் அலி
Reviews
There are no reviews yet.