ரவிக்குமார் தனது சமூக அக்கறைகளை அழுத்தமான அழகான தனித்துவமான குரலில் முன்வைக்கிறார். ‘வானில் விட்டெறிந்த கனவு’ இந்தக் கவிதை நூல் ‘சாட்சியங்களின் கவிதை’ என்பதற்கு முக்கியமான உதாரணமாக இருக்கிறது. தலித்துகள் மீதான வன்கொடுமைகளைப் பேசும் இக்கவிதைகள் அவற்றோடு தம்மை அடையாளப்படுத்தி அதனால் உருவாகும் வேதனையை எடுத்துரைக்கின்றன.
நமது காலத்துக் கவிதை ரோஜாக்களையும் பறவைகளையும் மட்டும் பாடிக்கொண்டிருக்க முடியாது. மாறாகத் தினமும் அவமானங்களுக்கிடையில் சுதந்திரமும் மகிழ்ச்சியும் கொண்ட இன்னொரு உலகத்தைப் படைக்கப் போராடிக்கொண்டிருப்பவர்களுடைய பற்றியெரியும் இதயஞ்க்களின் அடி ஆழத்திலிருந்து வெளிப்படவேண்டும் என்பதை ரவிக்குமார் கவிதைகள் உணர்த்துகின்றன.
– கவிஞர். கே.சச்சிதானந்தன்
Reviews
There are no reviews yet.