இத்தொகுப்பில் உள்ள சுதர்சனின் கவிதைகள் எல்லாம் யுத்த நெருப்பின் வெம்மையை, இனமுரண்பாட்டின் கொடுமையை, இடப்பெயர்வின் அவலத்தை, சந்தர்ப்பவாத அரசியலின் இழிவைப் பேசுபவை. அவ்வகையில் ஈழத்து அரசியல் கவிதை மரபில் இக்கவித்தொகை ஒரு புதிய வருகை எனலாம். இத்தொகுப்பில் ஏழு பிரிவுகளில் மொத்தம் 47 கவிதைகள் உள்ளன. இவை யுத்தகால அனுபவங்களையும், யுத்தத்துக்குப் பிந்திய போராட்ட கால அனுபவங்களையும் உரிப்பொருளாகக் கொண்டவை. துன்பமும் கோபமும் பின்னிப் பிணைந்த யதார்த்தத்தைப் பேசும் கவிதைகள் இவை. ஈழத்தில் வளர்ச்சியடைந்த அரசியல் எதிர்ப்புக் கவிதை மரபில் ஒரு புதிய வரவாக, ஒரு முக்கியமான ஆளுமையாகச் சுதர்சனை நாம் அடையாளப்படுத்தலாம். பன்முகத் தன்மையை அவருடைய கவிதைகளில் காணமுடிகின்றது. அரசியல் கவிதைக்குரிய அழகியலை அவர் பெரிதும் பேண முயன்றிருக்கிறார். அவருடைய அரசியல் பார்வை ஒருபக்கச் சார்பான தேசியம் அல்ல. அநீதிக்கு எதிரான, விமர்சனபூர்வமான பார்வை அவருடைய கவிதைகளில் இழையோடுவது நம் கவனத்துக்குரியது.
– பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்
Reviews
There are no reviews yet.