தமிழ் தலித் எழுத்தாளர்கள் சிலர் தம்மைப் பாதித்த, தம்மீது செல்வாக்கு செலுத்திய தலித் அல்லாத ஆசிரியர்களை இங்கே நினைவுகூர்ந்துள்ளனர். சமத்துவத்தின்மீது மதிப்புகொண்ட அந்த ஆசிரியர்களின் முன்னுதாரணம் மேலும் பல ஆசிரியர்களை அந்தத் திசை நோக்கி ஈர்க்கும் என நம்புகிறேன்.
ஃபிரான்ஸ் நாட்டின் கல்வியைச் சீரமைப்பதற்கான பரிந்துரைகளை அந்த நாட்டு அரசாங்கம் கோரியபோது அந்நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர் பியர் பூர்தியூ என்பவர் ஒன்பது பரிந்துரைகளை முன்வைத்தனர். “ கல்வி என்பது வாழ்நாள் முழுதும் நீடிக்க வேண்டும். வேலையில் சேர்வதோடு படிப்பை முறித்துவிடக்கூடாது” என்பது அவர் முன்வைத்த பரிந்துரைகளில் ஒன்று. அது நமது நாட்டுக்கும் பொருந்தும். இதன் பொருள் ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதல்ல. அவர்கள் தம்மை எப்போதும் மாணவர்களாக உணரவேண்டும் என்பதுதான் இதற்கு உண்மையான அர்த்தம். தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் இந்த நூலை ஒரு மாணவராக இருந்து கற்க வேண்டும் என வேண்டுகிறேன்
– ரவிக்குமார்
Reviews
There are no reviews yet.