“மன்னிக்கும் குணமற்றவர்கள் தமக்கு எதிராகச் செய்யப் பட்டவற்றை மறப்பதில்லை. அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினால் சில நேரங்களில் மன்னிப்பதுபோல் பாவனை செய்வார்கள். அதுவும்கூட அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் தந்திரமேயாகும். ஒரு சர்வாதிகாரி ஒருபோதும் மன்னிப்பதில்லை. தனக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் அவன் துல்லியமாகப் பதிவுசெய்து, மறைவாகப் பதுக்கிவைக்கிறான். பின்னர் பழிதீர்ப்ப தற்காக. சில சமயம் இந்தப் பதிவு எதிராளியின் முழுமை யான சரணாகதிக்காக அழிக்கப்படும். சர்வாதிகாரியின் பெருந்தன்மைக்கு அதுதவிர வேறு அர்த்தம் கிடையாது. தம்மை எதிர்க்கும் எல்லாவற்றையும் அடிமை கொண்டு விட வேண்டும் எனச் சர்வாதிகாரிகள் ஆசைப்படுகிறார்கள்.’
எலியா கனெட்டி
1905இல் பல்கோரியாவில் பிறந்தவர். 1981இல் இலக்கியத் துக்கான நோபல் பரிசைப் பெற்ற கனெட்டி 1994இல் மரணமடைந்தார். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றி ருந்தாலும் கும்பல் மனோபாவம் குறித்த அவரது ஆய்வே இன்றளவும் அவருக்குப் புகழ் சேர்த்து வருகிறது. பிற உடலின் தீண்டலுக்கு அஞ்சுகிற தனி மனிதர்கள் ஒரு கும்பலாகத் திரளும்போது அந்த அச்சம் மறைந்து ஒட்டு மொத்தக் கும்பலும் ஒரே உடலாக மாறுவதையும் அப்போது வெளிப்படும் ஆற்றலையும் விவரிக்கும் கனெட்டி, மனிதர்கள் எப்படியெல்லாம் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிய வைக்கப்படுகிறார்கள் என்பதை மிக நுட்பமாக ஆராய்கிறார். அவரது புகழ்பெற்ற Crowds and Power என்ற நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கு மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.