ரஷ்யப் புரட்சியின்போது பீட்டர்ஸ்பர்க்கிலிருந்த ஜார் மன்னர்களின் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றிய பின் அதைப் பாதுகாக்கச் சென்ற செம்படையினர் அங்குத் தாழ்த்தளத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அரிய மதுவகைகளில் மூழ்கி கரைந்து போவதைக் கேள்வியுற்ற போல்ஷிவிக் தலைவர் லெனின் மதுப்பானைகளை உடைக்க உத்திரவிட்டார். அதுவரை மன்னர்களால் அருந்தப்பட்டுவந்த மது, அரண்மனைத் தாழ்வாரங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.
மதுவிலக்கு என்பது நெறி சார்ந்த பிரச்சினையல்ல. இருப்பினும், அடிப்படை மாற்றத்திற்குக் கட்டமைக்கப்படும் இயக்கங்களுக்கு அது இன்றியமையாதது. இதனால்தான் கறுப்பு இசுலாமின் எலிஜா முகமதுவும், கறுப்பு சிறுத்தையான மால்கம் எக்ஸும் தங்களது இயக்கத்தில் உறுப்பினர்களாவதற்கு மது அருந்தாமையை நிபந்தனையாக்கினர்.
இந்தியாவிலும் சாதிக்கட்டுமானங்களை அசைத்துப் பார்ப்பவர்களுக்கும் அப்படிப்பட்ட நிபந்தனைகள் தேவை. தோழர் ரவிக்குமாரின் இந்த நூல் சமூக நீதி ஆர்வலர்களின் சிந்தனையை மேலும் தூண்டவைக்கும்.
நீதியரசர் கே. சந்துரு
Reviews
There are no reviews yet.