சபால்டர்ன் ஸ்டடீஸ் குழுவைச் சேர்ந்த ரணஜித் குஹா, டேவிட் அர்னால்ட் ஆகியோரது கட்டுரைகளும், அந்தக் குழுவைச் சேராத பர்ட்டன் ஸ்டெய்ன் எழுதிய கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன. காலனிய ஆட்சிக்கு முன்பும், காலனிய ஆட்சிக் காலத்திலும், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கும் பிறகுமான இந்திய வரலாற்றை ரணஜித் குஹா, டேவிட் அர்னால்ட் கட்டுரைகள் பேசுகின்றன. பர்ட்டன் ஸ்டெய்னின் கட்டுரைகள் காலனிய காலத்துக்கு முன்பிருந்த தமிழ்நாட்டின் வரலாற்றைப் பேசுகின்றன.
பொதுவாக இந்திய வரலாற்றையும், குறிப்பாகத் தமிழ்நாட்டு வரலாற்றையும் இதுவரை நாம் பார்த்திராத நோக்கில் இந்தக் கட்டுரைகள் ஆராய்ந்துள்ளன. கடந்த காலத்தை ஆய்வு செய்யும் இக்கட்டுரைகள் நமது எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கான வெளிச்சத்தையும், ஆற்றலையும் நமக்கு வழங்குகின்றன. வரலாற்றை விடுதலையின் கருவியாகப் பயன்படுத்த விழையும் ஒவ்வொருவரும் கட்டாயம் படித்தே ஆகவேண்டிய நூல் இது.

Reviews
There are no reviews yet.