புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மாணவராக இருந்தபோது எழுதிய ‘இந்தியாவில் சாதிகள்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வுக் கட்டுரை 100 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருத்தமாக இருப்பதற்குக் காரணம், அப்போதிருந்ததுபோலவே சாதி அமைப்பு இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான். இந்திய சாதி அமைப்பின் வேர் எங்கே இருக்கிறது என்பதை இந்த ஆய்வுக் கட்டுரையில் அம்பேத்கர் கண்டறிந்து முன் வைத்திருக்கிறார். ஆணவக் கொலைகள் அதிகரித்துவரும் இந்த நேரத்தில் அம்பேத்கரின் இந்த ஆய்வுரை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஆய்வுரையின் நூற்றாண்டின்போது (2016) இதை மீள் வாசிப்பு செய்வதற்கென மணற்கேணி ஒரு ஆய்வரங்கை ஒருங்கிணைத்தது. அதில் பேசப்பட்ட கருத்துகளும், அம்பேத்கரின் ஆய்வுரையும் இங்கே முன்வைக்கப்படுகின்றன. ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இது தூண்டுகோலாக அமையும் என நம்புகிறேன்.
– ரவிக்குமார்
Reviews
There are no reviews yet.