“இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ஏ.பி.ஷா ஆற்றிய இரண்டு சொற்பொழிவுகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
நீதிபதி ஏ.பி. ஷாவின் நீண்ட நீதித்துறை வாழ்க்கை அவரை பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருக்கச் செய்தது. இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராக அவர் பணியாற்றியபோது அவரது ஞானமும் கூர்மையான நீதித்துறை மனப்பாங்கும் வெளிப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, கொலீஜியத்தின் சூழ்ச்சிகள் அவர் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதைத் தடுத்தன, அது நீதித்துறைக்குத்தான் இழப்பு.
உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று தாராளவாதச் சொற்பொழிவுகளை வழங்குவது தீர்ப்பு வழங்கும்போது அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது என நடந்துகொள்ளும் சில நீதிபதிகளைப் போலல்லாமல், நீதிபதி ஷாவின் வார்த்தைகளும் செயல்களும் ஒரே நேர்கோட்டில் இருந்தன.”
– நீதிபதி கே.சந்துரு
Reviews
There are no reviews yet.