250.00

சாசனச் சொல் அகராதி

Meet The Author

இச் சாசனச் சொல்லகராதி சிறந்த கல்வெட்டறிஞரான தி. நா. சுப்பிரமணியன் அவர்கள் கல்வெட்டுச் சொற்களுக்கென்று செய்தளித்த முதல் தனி அகராதி ஆகும். தமிழ்நாடு அரசு சென்னைக் கீழ்த்திசை சுவடி நூலகத்துக்காக மெக்கன்சி சுவடித் தொகுப்பில் இருந்த 1100 கல்வெட்டுகளைப் பதிப்பிக்கும் பணியையேற்று அவற்றை 1953-57ஆம் ஆண்டுகளில் தென்னிந்தியக் கோயில் கல்வெட்டுகள் என்ற பெயரில் மூன்று தொகுதிகள் வெளியிட்டார்.  மூன்றாம் தொகுதி இரண்டாம் பகுதியில், கல்வெட்டுகள் மூலம் கிடைத்த (1) புதிய வரலாற்றுச் செய்திகள், (2) தமிழ் எழுத்து வளர்ச்சி பற்றிய பல அட்டவணைகளும் விளக்கமும், (3) சாசனச் சொல்லகராதி ஆகியவற்றை உருவாக்கிச் சேர்த்தார். இந்த மூன்று வகைச் செய்திகளையும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செய்தளித்தார் என்பதைக் கோடிட்டுக் காட்டவேண்டும். தமிழில் இருந்தாலே தமிழர் யாவருக்கும் பயன்படும் என்று அவர் உறுதியாக இருந்தார். நான்கு ஆண்டுகளில் இவ்வளவு ஆய்வுப் பணிகளையும் அவர் ஒருவரே செய்துமுடித்தது வியக்கத்தக்க ஒன்று.  இக்காலக் கல்வெட்டு மற்றும் வரலாற்றாய்வாளர் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு.

இவ்வகராதியைத் தொடர்ந்து தமிழ்க் கல்வெட்டுச் சொற்களுக்கு வேறுசில அகராதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அவ்வகராதிகளுக்கு முன்னோடியாகவும் பலவகையில் அடிப்படையாகவும் உள்ள பெருமை தி.நா.சு. அவர்களின் சாசனச்சொல்லகராதியைச் சேரும்.  இதற்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் இதை மீளப் பதிப்பித்த மணற்கேணி பதிப்பகத்தாருக்கு, குறிப்பாகத் தோழர் ரவிக்குமார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கத் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.

எ. சுப்பராயலு

Reviews

There are no reviews yet.

Be the first to review “சாசனச் சொல் அகராதி”

Your email address will not be published. Required fields are marked *