தமிழகத்திலும் இந்தியாவிலும் இந்தக் காலகட்டத்தில் (2006—2010) நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கும், அரசியலைப் பற்றிய பார்வையில் கூர்மையை வளர்த்துக்கொள்ள விரும்பும் அறிஞர்களுக்கும் ரவிக்குமாரின் 5 பாகங்கள் கொண்ட இந்த முழுத்தொகுப்பும் ஒரு பொக்கிஷம்.”
-ஆர். பகவான்சிங்
மேனாள் நிர்வாக ஆசிரியர், டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு
“ரவிக்குமாரின் எழுத்துகள், வெகுசன ஊடகங்கள் பெரிதும் பேசத் தயங்கும், மதவாதம், சாதியம், பாலின சமத்துவம், சிறைத்துறைச் சீர்திருத்தம், பிச்சைக்காரர்கள் நலன், என மனிதநேயப் பார்வையுடன் பிரமிக்கத்தக்க அளவில் ஒரு பரந்து விரிந்த உலகைத் தமிழ்ப் பத்திரிகை நேயர்களுக்கு அறிமுகம் செய்கின்றன.”
-மணிவண்ணன் திருமலை
மேனாள் ஆசிரியர், பிபிசி தமிழ்.
இலண்டன்
“மிகவும் நுணுக்கமாகவும், ஆழ்ந்த புரிதலுடனும், நல்ல பல வரலாற்று, சமூகத் தரவுகளை மையமாகக்கொண்டும் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் அன்றைய காலகட்டத்தில் நடந்தேறிய முக்கிய நிகழ்வுகளின் காலப் பெட்டகமாகவும் இருக்கின்றன. “
-இரா. இளங்கோவன்
இணை ஆசிரியர்
ஃப்ரண்ட்லைன்
“ஒவ்வொரு அரசியலரும் திறம்படச் செயல்பட வேண்டும் என்றால், இன்றைக்கு எவ்வளவு வாசிக்கவும், அறிந்துகொள்ளவும், விவாதிக்கவும் அயராது உழைக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து சுட்டுபவை ரவிக்குமாரின் எழுத்துகள்.”
-சமஸ்
ஆசிரியர்,
அருஞ்சொல்