எஸ்சி, எஸ்டி பட்டியல்களில் உள்ள சாதிகளைக் கூறுபடுத்தித் தனித்தனியே பிரித்து இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு இந்தியாவெங்கும் எஸ்சி, எஸ்டி மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இடஒதுக்கீட்டின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் என்று எஸ்சி, எஸ்டி மக்கள் கருதுகின்றனர். ‘இந்தத் தீர்ப்பை மாற்றும் விதமாக ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும்’ என்று வலியுறுத்திக் கடந்த 21 ஆகஸ்ட் 2024 அன்று நாடு தழுவிய பந்த் போராட்டத்தைச் சில அரசியல் கட்சிகளும் எஸ்சி, எஸ்டி இயக்கங்களும் நடத்தியுள்ளன. இந்தத் தீர்ப்பைப் புரிந்துகொள்ள மேலும் பல்வேறு வழக்குகளைப் பற்றிய விரிவான புரிதல் நமக்குத் தேவை. அதையெல்லாம் விரித்து எழுதினால் இது ஒரு மிகப்பெரிய நூலாக மாறிவிடும். முதலில் எல்லோரும் இந்த வழக்கின் பின்னணியை எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தச் சிறுநூல் இப்போது வெளியிடப்படுகிறது. இதை முன்வைத்து சமத்துவத்துக்கான, சமூக நீதிக்கான, ஆரோக்கியமான விவாதம் முன்னெடுக்கப்பட வேண்டும். அக்கறை உள்ளவர்கள் அதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
₹60.00
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் இடஒதுக்கீட்டின் மீதான தாக்குதலும்
Meet The Author
Be the first to review “உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் இடஒதுக்கீட்டின் மீதான தாக்குதலும்” Cancel reply
Reviews
There are no reviews yet.