Thenmozhi | தேன்மொழி
""
முனைவர் தேன்மொழி வேதியியலில் முதுநிலை பட்டம் பெற்றவர். தன்னார்வத்தின் காரணமாக வரலற்றில் முதுநிலைப்பட்டம் பெற்று, குன்றக்குடி ஆதீனக் கோயில்களைக் கலை வரலாற்று நோக்கில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு எனப் படைப்பிலக்கியத்திலும் தனி முத்திரைப் பதித்தவர். ‘தமிழின் எதிர்காலம்’ என எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியால் பாராட்டப் பெற்றவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, இந்தியாவின் பத்து இளம் எழுத்தாளர்களில் ஒருவராக இவரைத் தேர்வுசெய்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர் சங்கம் இவரது ‘கூனல்பிறை’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2016ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகத் தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை இவருக்குச் சிறந்த பெண் சாதனையாளர் என்ற விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான SPARROW விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.